Trending

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சிறப்பு முகாமில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் வாக்காளர்கள்!!

சிறப்பு முகாம்களில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கும் வீடுகளுக்கு சென்று நேரடியாக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பேட்டி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நகர அம்மா பேரவை செயலாளர் *ஆபிரகாம் அய்யாத்துரை* கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவது குறித்தும், அதிலுள்ள சிரமங்களை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது முகாமிற்கு வந்திருந்த சிலர் எழுப்பிய சந்தேகங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததற்கான உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்திற்கு கூடிய 14 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது இதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. 96 சதவீத விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி இந்த முகாம்கள் மூலமாக ஒரு லட்சத்து 82,000 விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதை வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாம் நடைபெற்று வருகிறது. ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவி செய்வதற்காக கல்லூரி மாணவர்கள்,மகளிர் சுய உதவிக் குழுவினர், இல்லம் தேடி குழுவினர் என தன்னார்வலர்கள் நிறைய நியமனம் செய்துள்ளோம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முகவர்களும் வாக்காளர்களுக்கு உதவி செய்து படிவங்களை பூர்த்தி செய்து வருகின்றனர். 2 நாள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் கொடுக்க முடியாதவர்கள், விடுபட்டவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2002 வாக்காளர் பட்டியலில் தேடுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று முறை வீடுகளுக்கு நேரடியாக செல்வார்கள், இதுவரை இரண்டு முறை நேரடியாக சென்றுள்ளனர். 3 வது முறையாக சென்று விடுபட்டவர்களிடம் பூர்த்தி செய்து வாங்கி வருவார்கள். யாரும் விடுபடாமல் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts