ஆழியாறு அணையில் முதலை நடமாட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அணையின் கரையோரத்தில் முதலை நடமாட்டம் இருப்பதை பார்த்த உள்ளூர்வாசிகள் அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் அணையில் முதலை இருப்பது உண்மைதான் என்றும் எனவே ஆழமான பகுதிக்கும் கரையோரங்களுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்

-𝗦𝗧𝗔𝗥.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *