உலக ஓசோன் தினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் கடைப்பிடிப்பு!!

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் கடைப்பிடிப்பு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக ஓசோன் தினம் குறித்து பேசும் பொழுது உலக ஓசோன் தினம் என்பது ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச விழிப்புணர்வு தினமாகும் .

புவியின் வளிமண்டலத்தில் உள்ள ஸ்டிராடோஸ்பியர் அடுக்கில் ஓசோன் வாயு நிறைந்துள்ளது.
இது மூன்று ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்ட (O₃) வாயு வடிவப் படலமாகும்.
பூமியில் உள்ள உயிர்களைத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க ஓசோன் படலம் உதவுவதால், இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.
சூரிய ஒளி இல்லாமல் பூமியில் உயிர் வாழ சாத்தியமில்லை. ஆனால் ஓசோன் படலம் இல்லாவிட்டால் பூமியில் உள்ள உயிர்கள் செழிக்க சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக அதிகமாக இருக்கும். இந்த ஓசோன் மண்டல அடுக்கு சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து நம்மைக் காக்கிறது.
2026 ஆம் ஆண்டு உலக ஓசோன் தினத்தின் கருப்பொருள், “குளிர்ச்சியான புவிக்கான உலகளாவிய செயல்பாடு மாண்ட்ரீல் நெறிமுறையின் கிகாலி திருத்தத்தின் கீழ் நீடித்த குளிர்ச்சியின் 10 ஆண்டுகளைக் கொண்டாடுதல்” என்பதாகும் ஆகும்
என்றும்,மரங்களை வளர்த்து இயற்கையான சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *