
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பிரிவு மற்றும் வேட்டைக்காரன்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் பாரம்பரிய தென்னங் கீற்று தடுக்கு தடுக்கு பின்னும் தொழில் தற்போது போதிய வரவேற்பின்றி மெல்ல மெல்ல அழிவின் விளிம்பிற்குச் சென்று கொண்டிருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தென்னை ஓலைகளை விலைக்கு வாங்கி அவற்றை தண்ணீரில் ஊறவைத்து கிழித்து கைகளால் நேர்த்தியாக தடுக்குகளாக பின்னி வருகின்றனர். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கத்தைகள் வரை மட்டுமே பின்ன முடிகிறது. மழைக்காலங்களில் கடுமையான சிரமங்களுக்கு இடையே இத்தொழில் நடைபெறுகிறது.
இங்கிருந்து பின்னப்படும் தடுக்குகள் பந்தல் அமைக்கவும் கூரை மற்றும் ஷெட் போடவும் கேரளா, தாராபுரம், தர்மபுரி, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய நவீன காலத்தில் கூலிங் ஷீட் (Cooling Sheets) போன்ற செயற்கைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தடுக்குகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து தொழில் மந்தமடைந்துள்ளது.
எங்களோடு இந்த பாரம்பரிய தொழில் முடிந்துவிடும் போலிருக்கிறது அடுத்த தலைமுறைக்கு இது தெரிய வாய்ப்பில்லை என அப்பகுதி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இயற்கை சார்ந்த இந்த பாரம்பரிய கைவினைத் தொழிலைப் பாதுகாக்கவும் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அரசு உரிய உதவி வழங்கி ஆதரவுளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.




