
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆல்பிரட் ஐன்ஸ்டீன் அறிவியல் மன்றத்தின் சார்பில் தேசிய பொறியாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தேசியப் பொறியாளர் தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக் கோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று தேசிய பொறியாளர் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
விஸ்வேஸ்வரய்யாவின் நினைவாக 1968 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் உள்கட்டமைப்பு, நீர் மேலாண்மை மற்றும் நவீன இந்தியாவின் வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்களிப்பைப் போற்றும் நாள் ஆகும்.
விஸ்வேஸ்வரய்யா வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் பொறியியல் துறையில் செய்த சாதனைகள் இன்றும் போற்றத்தக்கவை ஆகும். எனவே மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கும் நாளாக கடைபிடிக்கப்பட்டது என்று பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.






