
திருச்சி : தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டம் டோல்கேட் அருகே உள்ள காஜமியான் மேல்நிலைப் பள்ளியில் செப் 12 அன்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் திருமாவளவன் வரவேற்றார்.
மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் சுப்ரமணி,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், மணிகண்டன்,மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் அன்புச் செழியன், பூபாலன்,
மாவட்டத் துணைத் தலைவர்கள் தண்டபாணி, சுகுமார், கிருஷ்ண மூர்த்தி அழகர்சாமி, பாலகிருஷ்ணன்
மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிகண்டன், இளம்பரிதி, ஈஸ்வரன், பெருமாள்
மாவட்ட மகளீரணிச் செயலாளர் பிரபா,
மாவட்ட மகளீரணித் துணைச் செயலாளர்கள் அருட்செல்வி, கவிதா, செந்தில்வடிவு, கீதா ராணி, மீரா தேவி
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் அர்ச்சுனா, ஜீனத்துன்னிஷா
மாவட்ட மகளிரணித் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மாலினி, சூர்யா மேரி,அன்னகாமாட்சி உள்ளிடோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாநில சட்ட ஆலோசகர் நேதாஜி, மாவட்ட செயலாளர் உதுமான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் துணைத் தலைவர் இராஜங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன்
மாநில செய்தித்தொடர்பாளர் ரகமதுல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முழுமையாக அமல்படுத்திட வழிகாட்டுதல்களை வெளியிட்டு, 1.1.2026க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களான பணிக்கொடை, கமியூட்டேசன் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.
2. 1.1.2026க்கு முன்னர் பங்களிப்பு ஓய்வு திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் இன்றி தவித்து வருபவர்களுக்கு அரசாணை எண்.7 நிதித்துறை நாள் 9.1.2026ல் குறிப்பிட்டுள்ளபடி, பணிக்கால அளவிற்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உள்ளதை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும்.
3. த.வெ.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
4. ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்புக்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். அதேவேளை மாண்புமிகு பாரதப் பிரதமரை அவர்களை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொண்டு தகுதி தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தர வேண்டும்.
5. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் வழங்கிட வேண்டும்.
6. முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும்
7. 1999 இல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 6000க்கும் மேற்பட்டவர்களுக்கு (2800 level 10) சென்ற ஆண்டே கடைசி நிலைக்கு paycell (45) 75900/- க்கு வந்து விட்டார்கள். 2026 ஆண்டு ஜனவரி ஊதிய உயர்வுக்கு payCell நீட்டிக்கப்பட வேண்டும். 9 மாத காலமாகிமும் இன்னும் ஆண்டு ஊதிய உயர்வுக்கு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு pay cell நீட்டிப்புக்கான அரசாணை ஆணை வழங்கிட வேண்டும்
8. 2004-2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு 1.6.2006 முதல் காலமுறை வரை ஊதியம் பெற்று பணியாற்றி வரும் முதுகலை, பட்டதாரி இடைநிலை ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்
9. 10.3.2021க்கு முன்பு உயர்கல்வி பயின்று நிர்வாக காரணங்களால் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களுக்கு ஊக்க ஊதிய வழங்கிட வேண்டும்
10. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நீதி மன்ற வழக்குகளால் நடைபெறமால் உள்ளது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும்.
11. 6 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்க உள்ள காலை உணவு திட்டத்தை வரவேற்கிறோம். அதேவேளை 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தை நீட்டிக்க வேண்டுகிறோம்.
12. மிதிவண்டி வழங்கும் திட்டத்தை 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டுகிறோம்.
13. டேப்ஸ் திட்டத்தில் இடைக்கால மாதாந்திர ஊதியம் 30% வழங்கிட வேண்டுமென்று அரசாணை 111 நிதித் துறை நாள் 16.6.2026, வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் 1.1.2026க்கு பின்னர் தொடக்கக் கல்வித் துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இது காறும் இடைக்கால மாதாந்திர ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை. அவர்களுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக 30% இடைக்கால மாதாந்திர ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும்.
14. 2025 நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறிப்பாக ஊதிய உயர்வு நிறுத்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை வழங்கிட வேண்டும்.
15. NMMS, NTS, முதலமைச்சர் திறனறித் தேர்வு, தமிழ் தினறித்தேர்வு ஆகிய தேர்வுகள் விடுமுறை நாட்களில் நடைபெறுவதால், விடுமுறை நாட்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிட வேண்டும். அனைத்து தேர்விற்கு குறிப்பிட்ட ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்துவதைத் தவிர்த்து சுழற்சி அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
16. மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை 10% ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
17. அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் தமது திறமைகளை வெளிப்படுத்த ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா ஒரு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்
18. எம்பில் பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெற்றவர்களுக்கு தேவையில்லாத காரணங்களைக் காட்டி தணிக்கை தடை செய்ததை இரத்து செய்ய வேண்டும்.
19. கணிப்பொறி ஆசிரியர்களை கிரேடு-2வில் உள்ளவர்களை கிரேடு-1 ஆக மாற்ற வேண்டும். மேலும் கணிப்பொறி ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர்கள் என பெயர் மாற்றம் செய்து பணியில் சேர்ந்து காலமுறை ஊதியம் பெற்ற தேதியின் அடிப்படையில் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
20. 6 முதல் 10 வகுப்புகள் வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணிப்பொறி ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும். மேலும் தனியாக கணிப்பொறி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில மாவட்ட, வட்டார ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட மகளீரணிச் செயலாளர் ஜெயலெஷ்மி நன்றியுரையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.






