அமராவதி வனப்பகுதியில் வனப்பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் இயற்கையை நேசி அறக்கட்டளை வலியுறுத்தல்!!

பொள்ளாச்சி: திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசும் வனத்துறையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சமீபத்தில் அமராவதி நகர் பகுதியில் இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறை ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து யானைத் தந்தங்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்து யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்ததோடு இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்த அமராவதி வனச்சரகர் திரு. புகழேந்தி அவர்களுக்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய வனத்துறை அதிகாரிகள், வனக் காவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் எங்கிருந்து பெறப்பட்டன? அவை உயிரிழந்த யானைகளிடமிருந்து சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவையா? இச்சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts