
கோவை: நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜ் பவனில் மாவட்ட தலைவர் திரு எம்.பி. சக்திவேல் அவர்கள் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொள்ளாச்சி நகர காங்கிரஸ் ஏ. செந்தில்குமார் வரவேற்றார்.மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆர். கோபாலகிருஷ்ணன். சி.மோகன்ராஜ் .கே.ஆர். என்.தேவகுமார். மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மூத்த தலைவர்கள் மாவட்ட பேச்சாளர் அன்சர் பாய் .சுப்பு ஆறுமுகம்.இரும்பு கடை நடராஜ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் பொள்ளாச்சி டி. இ.எல்.சி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.ஆனைமலை வட்டாரம் சங்கம்பாளையம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் அவரது பெயராலேயே தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதே போல கோவை தெற்கு மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் மகாத்மா காந்தி பெயரால் MGNREGA திட்டம் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட வி.எஸ்.ஆர்.கே மோகன்.சிறுபான்மைத் துறை தலைவர் முபாரக் பாஷா.மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி. தாமஸ் சார்லஸ்.பிரபு ராம். வெண்ணிலா ரவிக் குமார்.ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் வீராசாமி கிருஷ்ணமூர்த்தி. கோபால் காந்தி.ராம்ராஜ்.அய்யாசாமி.மணிகண்டன். மகாலிங்கம்.மூர்த்தி .ஆறுக்குட்டி .மற்றும் ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அஃப்லால்.








