விளாத்திகுளத்தில் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்தியாலயா பள்ளி 13-ம் ஆண்டு விழா பள்ளிக்கல்வி குழும தலைவர் வீமராஜ் தலைமையில் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் பள்ளி செயலர் சுப்பா ரெட்டியார் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சாகித்யா அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு,மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாக அதிகாரி கணேசன், பள்ளி முதல்வர் அமராவதி உட்பட மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் உட்பட நிர்வாக குழுவினர்கள்
செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts