சுதந்திர தினம் & குடியரசு தினம் என்ன வித்தியாசம்..!!

இந்திய தேசியக் கொடியை ஏற்றும் முறையில் சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் இடையே முக்கியமான நுட்பமான வித்தியாசங்கள் உள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அன்று, தேசியக் கொடி கீழிருந்து மேலே ஏற்றப்படுகிறது. இதை கொடியேற்றம் (Flag Hoisting) என்று அழைக்கிறோம்.

இது இந்தியா அடிமைத்தனத்திலிருந்து போராட்டங்களின் வழியாக சுதந்திரம் பெற்றெழுந்ததை குறிக்கிறது. இந்த நாளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைவர் என்ற முறையில் பிரதமர் கொடியை ஏற்றுகிறார்.

குடியரசு தினம் (ஜனவரி 26) அன்று, தேசியக் கொடி ஏற்கனவே உச்சியில் கட்டப்பட்டு, கயிறு இழுக்கும் போது விரிக்கப்படுகிறது. இதை கொடி விரித்தல் (Flag Unfurling) என்று கூறுகிறோம். இது இந்தியா ஏற்கனவே சுதந்திர நாடாக இருந்து, தனது சொந்த அரசியலமைப்பின் கீழ் ஒரு குடியரசாக செயல்படுவதை குறிக்கிறது. இந்த நாளில், நாட்டின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் கொடியை பறக்க விடுவார் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts