பொள்ளாச்சி நகராட்சி சார்பில் சமூக சேவை மாண்பமை விருது முதலுதவி அறக்கட்டளைத் தலைவர் முனைவர் அபு இக்பால் உள்ளிட்டோருக்கு கௌரவம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில் நகரின் நலனுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய சமூக சேவகர்களுக்கு மாண்பமை விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​பொள்ளாச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை வகித்தார் நகராட்சித் துணைத் தலைவர் கௌதமன் மற்றும் நகர் நல அலுவலர் மருத்துவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும் சமூகப் பணிகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சமூக சேவகர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி முதலுதவி சமூக நல அறக்கட்டளைத் தலைவர் முனைவர் அபு.இக்பால், கம்பன் கலை மன்றத் தலைவர் கே.எம்.சண்முகம், ஈமச்சடங்கு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி (எ) பரமேஸ்வரன், பொள்ளாச்சி சதுரங்க சங்கத் தலைவர் ஜி.கருணாநிதி மற்றும் பொள்ளாச்சி சைக்கிளிங் கிளப் தலைவர் பர்கத்துல்லா ஆகியோருக்கு நகர மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் இணைந்து சமூக சேவை மாண்பமை விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

தொடர்ந்து நகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன இவ்விழாவில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts