
தேசிய சாலைப்பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக விபத்தில்லா கோவையை உருவாக்க ஓட்டுநர்களின் பார்வைத்திறனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து கோவை(மேற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திருமதி. ஆர். பிரதீபா அவர்கள் தலைமையில் இலவச சிறப்பு உடல் பரிசோதனை மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இதில் 112 ஓட்டுநர்கள் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக வந்த பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 46 நபர்கள் கண் சிகிச்சை தொடர வேண்டி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 6 ஓட்டுநர்களுக்கு இலவச சிகிச்சைக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் இலவச கண் அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் வட்டார போக்குவரத்து துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், இருக்கும் இடைவெளி விலக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது உள்ளபடியே மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாக அமைந்துள்ளது. பொது மக்களின் சார்பாக கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.
–MMH.







