
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூரைச் சேர்ந்தவர் பகவதி ஈஸ்வரன் இவரது மகன் மனோஜ் குமார் (34) இவர் ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று முன்தினம் மாலை தனிப்பட்ட வேலை காரணமாக பொள்ளாச்சிக்கு வந்த மனோஜ் குமார் வேலை முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் மீன்கரை சாலை வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஜமீன் ஊத்துக்குளி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அவர் ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது எதிரே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மனோஜ் குமாரின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் மனோஜ் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துடிப்புள்ள இளைஞரணி நிர்வாகியின் மறைவு அப்பகுதி திமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.






