“வாக்குச்சாவடிகளில் ஆட்கள் நியமிக்காவிட்டால் என் காதை அறுத்துக் கொள்கிறேன்”! – விளாத்திகுளம் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி

வாக்குச்சாவடிகளில் ஆட்கள் நியமிக்காவிட்டால் என் காதை அறுத்துக் கொள்கிறேன்” என்று – விளாத்திகுளம் காங்கிரஸ் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி பேசினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி, “காங்கிரஸ் கட்சியினரை இனி யாரும் ஏமாற்ற முடியாது. கடந்த காலங்களில் நாம் பலமுறை ஏமாந்துவிட்டோம். குறிப்பாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் நமக்கு 20 சதவீத இடங்கள் தருவதாகக் கூறிவிட்டு, இறுதியில் ஏமாற்றிவிட்டனர்.

இனி முதுகுக்குப் பின்னால் குத்துவதை அனுமதிக்க மாட்டோம்; அப்படிச் செய்தால் பதிலுக்குப் பதில் உரிய பாடம் புகட்டுவோம். உலகத்தின் மிகப்பெரிய தீய சக்தி பாஜகதான். அந்தச் சுவர் இப்போது முட்டி மோதி இடியும் நிலையில் உள்ளது. 2029-ல் ராகுல் காந்தி நிச்சயமாக இந்தியாவின் பிரதமராவார். காங்கிரஸ் இல்லையென்றால் இந்த நாடு துண்டாடப்படும் நிலை ஏற்படும். இன்று ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் காங்கிரஸின் தயவை எதிர்பார்த்தே காத்திருக்கின்றனர்.

தமிழக அரசியலில் இளம் தலைவராக வந்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தகுதியான ஆட்களை நியமிப்போம். அப்படி நியமிக்கத் தவறினால் என் காதை அறுத்துக் காட்டுகிறேன்,” என்று பேசினார்.

இந்த நிகழ்வில் விளாத்திகுளம் காங்கிரஸ் பொறுப்பாளர் பெத்துராஜ், நகரச் செயலாளர் ஞானராஜ், மேற்கு வட்டாரத் தலைவர் போத்திராஜ் மற்றும் மாவட்ட, வட்டார அளவிலான ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *