சிறுத்தையா..? காட்டுப் பூனை யா..? போத்தனூரில் பரபரப்பு..!!

கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் கல்யாண மண்டபம் அருகே நேற்று இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் மதில் சுவரில் சிறுத்தை ஒன்று ஏறி செல்வதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று இரவு சுமார் எட்டுமணி அளவில் சிறுத்தை ஒன்று மதில் சுவரில் ஏறுவது போன்ற வீடியோ பதிவை போத்தனூர் சேர்ந்த இளைஞர் ஒருவர் படம் எடுத்துள்ளார். இரவு நேரமாக இருப்பதால் சரியாக அது சிறுத்தை தானா என்று கணிக்க முடியவில்லை. இந்த செய்தி போத்தனூர் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. உடனடியாக போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நேரில் வந்த காவல் ஆய்வாளர் அசோக் குமார் அவர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். வீடியோ பதிவு எடுத்த நபரை விசாரித்தார்.

மக்கள் வீதி அடைய வேண்டாம் என்ற நோக்கத்தோடு விசாரணையை மேற்கொண்டு உடனடியாக அது காட்டுப் பூனை தான் என்று வனத்துறை அதிகாரிகளைவைத்து உறுதி செய்யப்பட்டது. வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

உடனடியாக பொதுமக்களை அச்சத்தில் இருந்து மீட்டெடுத்த காவல் ஆய்வாளர் அசோக் குமார் அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts