
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய கொலை வழக்கில் சிறுமி புகைப்படம் மற்றும் விவரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 22 வழக்குகள் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை – சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் பெயர் உட்பட விவரங்களை சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அது அந்த சிறுமியின் மாண்பையும் தனிப்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதை தடுப்பதாகும்.
அதன்படி குளத்தூர் காவல் நிலைய சிறுமி கொலை வழக்கில் சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தெரியப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை குளத்தூர் காவல் நிலைய கொலை வழக்கில் சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.





