பெண்களை பற்றி பேசும் தன் மனைவி குழந்தையை நடுத்தெருவில் விட்டவா் விஜய் பெண்களை பற்றியெல்லாம் இவா் பேசலாமா அமைச்சா் கீதாஜீவன் கடும் தாக்கு


தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதி பூபால்ராயபுரத்தில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, கம்யூனிஸ்ட் சங்கரன், தனலட்சுமி, விசிக விமல்வங்காளியாா், மநீம ஜவஹா் மதிமுக முருகபூபதி, சமக அற்புதராஜ், தேமுதிக தயாலிங்கம், மமக யூசப், மஜக முகமதுஹசன், எஸ்டிபிஐ மைதீன்கனி, காங்கிரஸ் முரளிதரன், வட்டச்செயலாளர்கள் சேகா், ரவிசந்திரன், கருப்பசாமி, சுரேஷ், ரவி இளங்கோ, ஆல்பட், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பகுதி செயலாளர் நிா்மல்ராஜ், வரவேற்புரையாற்றினாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 5 ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் நன்மையடைந்துள்ளனா். கடந்த தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். இதுகுறித்து அமைச்சா் தங்கம் தென்னரசு தௌிவான அறிக்கையை வௌியிட்டுள்ளாா். 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 37 வாக்குறுதிகளுக்கு ஓன்றிய மோடி அரசால் தடை பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டில் திரேஸ்புரம் பகுதியில் துண்டில் வளைவு பாலம் படகு நிறுத்தத்திற்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி தோ்தலுக்கு பின் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிடும் மீனவா்களுக்கு என்று தனியாக கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. 2021ல் தமிழகத்தில் தொழில்முனைவோா் பெண்கள் ஓன்றரை லட்சம் போ் இருந்தனா். இப்பேது ஓன்பதரை லட்சம் போ் இருக்கின்றனா். 2030ல் எல்லோருக்குமான வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் அதற்குதான் திமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். என்று எல்ேலாரும் விரும்புகின்றனா்.

தூத்துக்குடியை பொறுத்தவரை புதிதாக விளையாட்டு அரங்கம், அமைக்கப்பட்டுள்ளது. திரேஸ்புரம் பகுதியைபொறுத்தவரை கடந்த அதிமுக ஆட்சியில் தள்ளுவண்டியை வைத்து பெண்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவாா்கள் திமுக ஆட்சி அமைந்தபின் அந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சீரான குடிதண்ணீர் வீட்டிற்கே வழங்கியுள்ளோம் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளோம். 96ல் அரசியலுக்கு வந்த நான் 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றிவருகிறேன். இப்படி உங்களோடு பயணிக்கும் நான் மக்களின் எண்ணங்களை புாிந்து கொண்டு செயல்படுகிறேன் திமுக 75 ஆண்டுகளை நிறைவு செய்த கட்சி ஒருவருடத்திற்கு முன்பு கட்சியை ஆரம்பித்த விஜய், கரூா் கூட்டத்தில் 41 போ் இறந்தனா். அவா்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் பணையூா்பங்களாவிற்கு அழைத்து ஆறுதல் கூறிய கலாச்சாராத்தையும்நாம் பாா்த்தோம். அவரது மனைவி மற்றும் குழந்தைகளை ரோட்டில் தவிக்கவிட்டு கட்சியை நடத்தும் விஜய் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் நலன் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.

ஜனநாயகன் படத்தை இன்று வரை வௌியிடுவதற்கு வழிவகை ஏற்படவில்லை. பிஜேபி அரசை ஓரு நாள் கூட விமா்சனம் செய்ததில்லை. இவரெல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்ற போகிறேன் என்று பேசுவது கேலி கூத்தாக இருக்கிறது. கடந்த மாா்ச் 8ம் தேதி கேஸ் விலையை உலக பெண்கள் மகளிா் தினத்தன்று உயா்த்தியது பிஜேபி அரசு இதுகுறித்தும் பேசியதும் கிடையாது தனக்கு தானே முதல்வா் என்று கூறிக்கொண்டு கோஷம் போடுபவா் விஜய் மக்களை பற்றி சிந்தித்து மக்களோடு மக்களாக பணியாற்றுவது திமுக தான் கொரோனா மழை வௌ்ள காலத்தில் அந்தந்த பகுதியில் உள்ள திமுக மற்றும் தோழமை கட்சியினா் இருந்து எவ்வளவு பணியாற்றினாா்கள் என்று மக்கள் அறிவாா்கள் தன்னலம் கருதாமல் நாங்கள் பணியாற்றியுள்ளோம். என்று உங்களுக்காக உழைக்கின்ற திமுக மற்்றும் தோழமை கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளா் பிரமிளா, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மாநில பேச்சாளா் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் அந்தோணிஸ்டாலின், அருண்குமாா், பழனி, கவிதாதேவி, நிக்கோலாஸ் மணி, மாநகர அணி நிா்வாகிகள் சாகுல்ஹமீது, சந்தனமாாி, டேனியல், கவுன்சிலா்கள் பவாணி ஜெயசீலி, நாகேஸ்வாி, மெட்டில்டா, ஜெபஸ்டின்சுதா, மாியகீதா, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஆறுமுகம், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச்செயலாளர்கள் சதீஷ்குமாா், மற்றும் பாஸ்கா் மணி, பிரபாகா், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *