ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 2 தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது

இதில் பசுவந்தனை பரிவல்லிகோட்டை ஓட்டப்பிடாரம் எப்போதும் வென்றான் வேடநத்தம் மணி யச்சி குறு வட்டங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் மொத்தம் 715 மனுக்கள் பெறப்பட்டு 152 மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று நடந்த ஜமாபந்தி நிறைவு நாளில் ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் சில்லாநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 135 மனுக்களை வழங்கினர்
இன்று ஜமாபந்தியில் 8 நபர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்த்தின் கீழ் ரூ 165000 மதிப்பில் இறப்பு நிவாரணம் ஆணை 1 நபருக்கு தற்காலிக நிவாரணம் 2 நபர்களுக்கு வாரிசு சான்றிழ் 11 நபர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் இ பட்டா வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் சிப்காட் தனி வட்டாட்சியர் சந்திரன் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இசக்கிராஜ் துணை வட்டாட்சியர்கள் மரியவியாகுல ஜெயா , மாரிமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts