
கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிருஷ்ணா காலேஜ் பின்புறம் உள்ள முள் புதரில் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பரபரப்பான கோவை மாவட்டத்தில். இன்று காலை குனியமுத்தூர் பைபாஸ் சாலை அருகே பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது சுமார் 24 இருப்பதாக கூறுகின்றனர். இந்தப் பெண் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடும் என தெரிகிறது. அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த பெண்ணை யார் கொலை செய்தார்கள் என்றும், கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார திருமணம் ஆனவரா, கல்லூரி மாணவரா, என்று தெரியவில்லை அழுகிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தப் பெண்ணின் இறப்புக்கு என்ன காரணம் என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.











