இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!!

கோவை: பாரம்பரிய கைவினை மற்றும் நிலைத்தன்மை மிக்க ஆடை வடிவமைப்புக்காக அறியப்படும் சொகுசு ஆடை நிறுவனமான கையாரா (GAIARA), இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களின் பாரம்பரியக் கலை வடிவங்கள், எம்பிராய்டரி நுட்பங்கள் மற்றும் கலாசாரக் கதைகளில் இருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, பாரம்பரியத்தையும் நவீன ஆடை வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து கையாரா நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷா வர்தினி கூறுகையில்
“இந்தியாவின் பாரம்பரியத்தையும், கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பையும் போற்றும் வகையில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ உருவாக்கப்பட்டுள்ளது.பாரம்பரியத்துக்கும் நவீன சொகுசு ஆடை வடிவமைப்புக்கும் இடையே பாலமாக இந்தத் தொகுப்பு அமையும் என்றும் இந்தியாவின் வளமான கலாசார மரபை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், அதன் உண்மைத்தன்மையையும் பாதுகாக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது” என்றார்.

இந்த ஆடைத் தொகுப்பின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி, ஊடகப் பிரபலமும் கலாசார தூதுவருமான அபர்ணா சுங்கு தலைமையில் நடைபெற்றது. இந்திய பாரம்பரியம் மற்றும் கதை சொல்லல் மீதான அவரது ஆர்வம், இந்தத் தொகுப்பின் நோக்கத்துடன் ஒத்துப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்புத் துறையினர், ஊடகப் பிரதிநிதிகள், கலாசார ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts