மொஹரம் பண்டிகை சென்னை எழும்பூர் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!!

 

கோவை:
மொஹரம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் – போத்தனூர் இடையே திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு

சென்னை எழும்பூர் – போத்தனூர் சிறப்பு ரயில் (ஜூன் 25, வியாழன்)
ஜூன் 25-ம் தேதி வியாழக்கிழமை இரவு 11:55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10:55 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.

போத்தனூர் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (ஜூன் 28, ஞாயிறு)
மறுமார்க்கமாக ஜூன் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11:55 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் இருமார்க்கங்களிலும் பின்வரும் நிலையங்களில் நின்று செல்லும்
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி (திருச்சி), திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை, ஜூன் 24) காலை 08:00 மணி முதல் தொடங்கியுள்ளது.
​தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லத் திட்டமிடும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தி தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்

உங்கள் STAR M.சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts