
கோவை மாவட்டம் வால்பாறை: மாண்புமிகு முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை வட்டார பகுதிகளில் தவெக தொண்டர்கள் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று காலை நகராட்சி பணியாளர்களுக்கு கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி கொண்டாடப்பட்டது.
பின்பு வால்பாறை வட்டார பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பணியாற்றும் இடத்திற்கு சென்று இனிப்புகளை வழங்கினார்கள். பின்பு அரசு ஆரம்பப் பள்ளிகளிழும் டியூஷன் சென்டர்களிலும் சென்று மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா,நோட் புக் போன்ற படிப்புக்கு உதவும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
மாசில்லாத சுற்றுச்சூழலை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை பொதுமக்கள் அனைவரும் சிறப்பான முறையில் சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பேபி திவ்யக்குமார்.











