கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாமுநயினார்புரம் கிராமத்தில் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாமுநயினார்புரம் கிராமத்தைச் சேர்ந்த திமுக மாநிலப் பொதுக்குழுப் பொறுப்பாளர் ராஜாக்கண்ணு ஏற்பாட்டின் பேரில் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த குருப்பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா ஆகிய இரட்டை நிகழ்வுகளை முன்னிட்டு இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இவரது சொந்த கிராமத்தில் நடத்தப்பட்டது.

பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இப்போட்டியானது மாமுநயினார்புரம் கிராமத்தில் தொடங்கி விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது.

குறுகலான சாலை அமைப்பாக இருந்தாலும், பந்தயத்தில் பங்கேற்ற சாரதிகள் மற்றும் பின்சாரதிகள் மாடுகளை மிகவும் நேர்த்தியாகக் கையாண்டு வெற்றி இலக்கை நோக்கி வண்டிகளைச் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, பந்தயத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாகப் ரொக்கப் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் இம்மானுவேல், தமிழக ஏர் உழவன் விவசாய சங்கப் பொறுப்பாளர் ராஜேஷ் உட்படப் பகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் சாலை இருபுறங்களும் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என பலர் திரளாகக் கலந்து கொண்டு பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts