கூட்டுறவு சங்கத்தில் 100 பவுன் தங்க நகையை திருட முயற்சி!!

 

காவல்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அவர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெள்ளைமாபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த கிராமத்தில் கடன் சங்கத்தில் வழக்கம்போல் பணிகள் முடித்தும் அங்கிருந்த எழுத்தாளர் மாரீஸ்வரி கட்டிடத்தின் கதவுகளை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அன்று கூட்டுறவு சங்க செயலாளர் செல்வகுமார் அலுவலகப் பணி காரணமாக சங்க அலுவலகத்தை திறப்பதற்காக வந்துள்ளார் அப்போது கூட்டுறவு கடன் சங்கம் கட்டிடத்தின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக அவர் கட்டிடத்தில் உள்ளே சென்று தற்போது உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்து முக்கிய லாக்கரின் அறை பலவந்தமாக உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அதை உடைக்க முயற்சி செய்து உடைக்க முடியாத நிலையில் அங்கிருந்து சென்றுள்ளனர் அதிர்ஷ்டவசமாக லாக்கர் அறை உடையதால் உள்ளே இருந்த பணம் மற்றும் நகைகள் தப்பியது இதை தொடர்ந்து முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சிசிடிவி கேமரா வயல்களையும் அபாயா அலாரம் வயர்களையும் துண்டித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த எப்போது கொன்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் மேலும் சம்பவ இடத்தில் கைரேகைகள் நிபுணர்கள் விரைந்து தடயங்களை சேகரித்தனர் லாக்கர் இருந்த அறையில் சுவரை உடைக்க முயற்சித்துள்ளனர் சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் பத்திரங்கள் தப்பிய நிலையில் இந்த மாதிரி துணிகிற கொள்ளை முயற்சி குறித்து எப்போது ஒன்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இன்று விளாத்திகுளம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் செயலாளர்கள் மற்றும் அலுவலர்களை அழைத்து விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு
குறித்து ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் இரவு காவலர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் மற்றும் கேமரா பதிவுகளை தங்களுடைய மொபைல் போனில் கண்காணிக்க வழி வகுக்க வேண்டும் தங்களுடைய சங்கங்களில் உள்ள பட்டா புத்தகத்தில் காவல்துறையினர் தினமும் வந்து கையொப்பம் செய்கிறார்களா என்பதை கண்காணித்து கையொப்பம் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சூரங்குடி ஆய்வாளர் சுதாகர் உதவி ஆய்வாளர். நாராயணன் .செந்தில் முருகன். காவல்துறையினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts