சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக காகித பை தினம் கடைபிடிப்பு!!

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக காகித பை தினம் கடைபிடிப்பு!!

சுற்றுச்சூழலை பாதுகாக்க காகித பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு.

கந்தர்வகோட்டை ஜீலை 13

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக காகித பை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும்பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக, மக்கும் தன்மை கொண்ட காகிதப் பைகளின் பயன்பாட்டை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூலை 12 அன்று உலக காகித பை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பிளாஸ்டிக் பைகள் போலல்லாமல், காகிதப் பைகள் எளிதில் மட்கக்கூடியவை. இவை நிலத்தடி நீரையும், கடல்வாழ் உயிரினங்களையும் பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

மறுசுழற்சி
காகிதப் பைகளை மீண்டும் பயன்படுத்த முடியும் மற்றும் எளிதாக மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால் காகித பைகளை பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கைக்கும் நமது பூமிக்கும் உகந்த காகிதப் பைகள் மற்றும் துணிப் பைகளைப் பயன்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும் என்று பேசினார். மாணவர்களுக்கு காகிதப்பை எவ்வாறு செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts