​ஆழியார் அருகே பரபரப்பு இருசக்கர வாகன ஓட்டியை ஆக்ரோஷமாக துரத்திய குட்டிக்கொம்பன் யானை!!

பொள்ளாச்சி
ஆனைமலை ஆழியார் மற்றும் வால்பாறை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே வால்பாறை மற்றும் நவமலைச் சாலைகளில் காட்டை விட்டு வெளியேறும் காட்டு யானைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் வனத்துறையினர் சோதனைச் சாவடிகளில் பயணிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி அனுப்பி வைக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் ஆழியார் சின்னார்பதி அருகே வால்பாறை சாலையில் குட்டிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை திடீரென உலா வந்தது. அப்போது வால்பாறையிலிருந்து ஆழியார் நோக்கி வந்த இருசக்கர வாகனம் ஒன்றைக் கண்ட அந்த யானை தன் உடம்பில் புழுதி பறக்க ஆக்ரோஷமாக வாகன ஓட்டியைத் துரத்தியது.

யானை பாய்ந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டி சமயோசிதமாகத் தனது வாகனத்தை உடனே பின்னோக்கித் திருப்பி வேகமாகச் சென்றார். இதனால் அவர் நொடிப் பொழுதில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவத்தால் அந்தச் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர் உங்கள்

-STAR M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts