
புதுக்கோட்டை ஜீலை 14
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஆலோசனை குழு கூட்டம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்ட அரசு ஊழியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையற்றார்.கல்வி மாவட்ட செயலாளர் கலையரசன் அனைவரும் வரவேற்றார்.
மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் மாநில சட்ட ஆலோசகர் ராஜா, மாநில செய்தித் தொடர்பாளர் ரகமத்துல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை குழு கூட்டத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும். 2004 2006 தொகுப்புதிய காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும். மூத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்துதல், சென்னையில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது, உறுப்பினர் சேர்க்கை சங்கத்தின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, வெள்ளைச்சாமி, கஸ்தூரி ரங்கன், கண்ணன், ரவீந்திரன் பழனிச்சாமி, அமுல்துரை, செல்லக்கண்ணு, முருகராஜ், சண்முகம், செல்வம் முருகராஜ் சண்முகம் செல்வம், பாபு சிவராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை ) திருமேனி நாதன், புதுக்கோட்டை மாவட்டம் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) மாரிமுத்து உள்ளிட்டோரை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மாவட்ட பொருளாளர் (பொறுப்பு) வீரமணி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.





