
பொள்ளாச்ச: கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி PAP அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் N.K. பகவதி தலைமை தாங்கி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த விசேஷ நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களுள்
மோகன்ராஜ் (மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்)
சத்தீஸ்வர் செந்தில்குமார்
சுப்பிரமணியன் (புளியம்பட்டி கிராம கமிட்டி தலைவர்)
மங்கல பிரதாபன் முரளீதரன்
ஹமீது
உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக வாழ்க பெருந்தலைவர் புகழ் வெல்க காங்கிரஸ் பேரியக்கம் என்ற எழுச்சிமிகு முழக்கங்களுடன் காமராஜரின் மக்கள் நலப்பணிகளும் தியாகங்களும் நினைவு கூரப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள்
-STAR M.சுரேஷ் குமார்.





