
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோயில், காவல் நிலையம், அண்ணா திடல் கார் பார்க்கிங் வசதி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் மழை நீர் சாக்கடை கால்வாய் இல்லாமல் சாலையில் பொதுமக்களுக்கு இடையூராக செல்கிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் அவல நிலை உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதியில் இருந்த சாக்கடை கால்வாய் மூடப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. இந்த சாலையில் கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகிய பொருட்கள் ஒழுகி வருவதினால் வாகனங்கள் ஏறி அவைகள் உடைந்து விடுகின்றது. கண்ணாடிகள் உடைந்து சிதறுவதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகும் அவல நிலை உருவாகிறது. பொதுமக்களின் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டு விடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைத்து மழை நீர் சாக்கடை நீரில் கலந்த கால்வாயில் செல்ல வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் . இதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்படும் முன்னே இந்த கால்வாய் பொதுமக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
– திவ்யக்குமார்.






