கையில் உருவாக்கப்பட்ட திருவாரூர் தேர், வள்ளுவர் கோட்டம் பொம்மைகள் – அமைச்சர் சம்பத்குமார் ஆச்சரியம்!

கோவையில் பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் சிறப்பு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை பெரிய கடைவீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, சமூக வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தை பிரதிபலிக்கும் ஏராளமான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியில் கைவினைஞர்களால் கையில் தயாரிக்கப்பட்ட திருவாரூர் தேர், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பொம்மைகளை பார்த்த அமைச்சர் சம்பத்குமார் ஆச்சரியமடைந்தார். அப்போது, “இதை பள்ளி குழந்தைகள் செய்தார்களா? அல்லது நீங்கள் செய்தீர்களா?” என ஆச்சரியத்துடன் கேட்டார்.

தசாவதாரம், விநாயகர், அத்தி வரதர், தர்பார், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், கிரிவலம், கருட சேவை, திருப்பதி, குபேரன், வைகுண்டம், மைசூர் தசரா, எலி நடனம், வளைகாப்பு, உழவர் சந்தை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், தஞ்சாவூர் உருட்டு பொம்மை, மரப்பாச்சி பொம்மைகள், சமையல் பொருட்கள், முருகன் தங்கத் தேர், குருவாயூர் கோயில், மதுரை தெப்பக்குளம், இராமாயணக் கதை தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஃபோம் மற்றும் மரப்பொம்மைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய கைவினைப் பொருட்களுடன், ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் மரப்பொருட்களும், சன்னப்பட்டணா மற்றும் எட்டிக்கோப்பாக்கா மரப்பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பண்டிகைக் கால சலுகையாக அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் கூடுதல் சேவைக் கட்டணமின்றி பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும் நடத்தப்படும் இக்கண்காட்சியின் மூலம் ரூ.75 லட்சம் மதிப்பிலான விற்பனையை இலக்காக பூம்புகார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

 

.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts