டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம்!!

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தின் செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆனைமலைஸ் டொயோட்டா அதிகாரிகள் பேசுகையில்;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

2.8 லிட்டர் பிஎஸ்6 பேஸ்-2 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த வாகனம், அதிகபட்சமாக 204 பிஎஸ் சக்தியையும், 500 என்.எம் டார்க்கையும் வழங்குகிறது.
6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 80 லிட்டர் எரிபொருள் டேங்க் இடம்பெற்றுள்ளது.

புதிய ஹைலக்ஸின் முக்கிய சிறப்பம்சமாக 4×4 இயக்க வசதியுடன், எலக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், டவுன்ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் மல்டி டெர்ரெயின் செலக்ட் உள்ளிட்ட வசதிகள், சவாலான சாலைகள் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களிலும் சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிப்புற வடிவமைப்பில் புதிய கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், டேடைம் ரன்னிங் லைட்கள், எல்இடி பனி விளக்குகள், அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன..

உட்புறத்தில் 12.3 அங்குல தொடுதிரை தகவல்- வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டொயோட்டா ஐ-கனெக்ட், டிஎஃப்டி தகவல் திரை, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய ஹைலக்ஸ் கவனம் பெற்றுள்ளது. 7 ஏர்பேக்குகள், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஐஎஸ்ஓஃபிக்ஸ், டயர் பிரஷர் கண்காணிப்பு, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், பனோரமிக் வியூ மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts