கரடி தாக்கி ஒருவர் காயம்!!

கோவை மாவட்டம் வால்பாறை இறுதிப் பாறை எல்டி பகுதியில் கிளிண்டன் என்பவர் தனது மனைவி கற்பகம் மற்றும் குழந்தைகள் இருவருடன் இஞ்சிப்பாறை தேயிலை தோட்ட தொழிலாளி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேயிலை தொழிற்சாலைக்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் கிளிண்டன் வேலைக்கு சென்றார். அப்பொழுது மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. அக்கம்பக்கத்தினர் அலறல்  சத்தத்தை கேட்டு உடனே விரைந்து வந்து அவரைக் காப்பாற்றினார்கள். அந்த கரடியை காட்டுக்குள் விரட்டிவிட்டனர். அவரை பொதுமக்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை குறித்து வால்பாறை வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இது போன்ற சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது என புகார் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் திவ்யக்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts