
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் மாதம் தோறும் தமிழ் மொழியில் வெளி வரக்கூடிய அறிவியல் மாத இதழான துளிர் மாத இதழ் செப்டம்பர் மாதத்திற்கான துளிர் வாசகர் திருவிழா அக் 07 அன்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் மாணவ, மாணவிகள் தமிழ் இனியா, மிதுன் மணியன், தமிழரசன், தமிழரசி, யோகேஷ், ஹரிஹரசுதன், ஹர்விந்த்ராஜ், ஜெயஸ்ரீ, பிரியதர்ஷினி, ஆஷிக் உள்ளிட்டோர் துளிர் மாத இதழில் உள்ள தலைப்புகளான கல்லாதது கடல் அளவு, காலடிகளை பின் தொடர்வோமா, கடுகும் சோளமும் ஏன் வெடிக்கின்றன, விளையாட்டின் அறிவியல் அழுத்த வேறுபாடும் பந்தின் சுழற்சியும், தேன் கரடி, நீர் துளிகளின் நடனம், பூமியை நேசிக்கக் கற்றுத் தந்த ரோபோ, சப்போட்டாவின் சபதம், உடலின் எச்சரிக்கை மணியை மௌனமாக்கும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட தலைப்புகளில் வாசித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வக் கோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.




