கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சுப்பே கவுண்டன்புதூர் சுங்கம் பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் மருதமுத்து அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியை ஆனைமலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கன்னிமுத்து அவர்கள் துவக்கி வைத்தார் மற்றும் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சிலம்பரசன்,
சுப்பையா கவுண்டன் புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்நடராஜ், விஜயகுமார், ஹிமாலயா யுவராஜ், செந்தில், மைதீன், மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.