திமுக அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு விழா கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஓராண்டு சாதனைவிளக்க புகைப்படக்கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி திறந்து வைத்து, பார்வையிட்டார்.
உடன் கூடுதல் தலைமைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான சிவதாஸ் மீனா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார்,
மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சையது காதர்.