தேனி மதுரையிலிருந்து தேனி மற்றும் போடிநாயக்கனூர் செல்லும் ரயில் பாதையானது அகலப்படுத்த புதிய திட்டம் 2011 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் சில காலங்கள் தாமதங்கள் ஏற்பட்டும் பின்னர் அரசு மாற்றங்கள் நடைபெற்றதாலும் வேலை ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.
இதனால் தேனி போடி வசிக்கும் மக்கள் சீக்கிரமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பலர் பல எதிர்ப்புகளை தெரிவித்தனர். பின்னர் இதற்காக மீண்டும் 2017 ஆம் ஆண்டு 354 கோடி இதற்கென்று ஒதுக்கப்பட்டது. அனைத்து வேலைகளும் மதுரை முதல் தேனி வரை முடிவடைந்துள்ளது. மீண்டும் தேனி முதல் போடிநாயக்கனூர் 15 கிலோமீட்டர் தூரம் ரயில் ரயில் பாதை அகலப்படுத்தும் பணி மிகவும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ரயில் பாதை ஆனது அகல் அகலப்படுத்தப்பட்ட பின்னர் மிக விரைவில் ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனி மற்றும் போடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்லாது அதன் அருகாமையில் இருக்கும் கேரள மாநிலம் மூணார் பகுதி சேர்ந்த மக்களுக்கும் போக்குவரத்து மிகவும் எளிதாக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.