120 பி. எஸ். 6 ரக அரசு பஸ்கள் கோவையில் விரைவில் இயக்கம்!!
தமிழக அரசு கோவைக்கு வழங்கிய 120பி. எஸ். 6 ரக அரசு பஸ்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. தமிழகத்தில் 1, 000 புதிய அரசு பஸ்களை 420 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு வாங்கியது. தமிழகத்தின் 8 போக்குவரத்துக்கழகங்களில் உள்ள காலாவதியான பஸ்களை ஈடு செய்யவும் காற்று மாசுப்பாட்டை குறைக்கும் பி. எஸ். -6 ரக பஸ்களை பயன்படுத்தும் வகையிலும் புதிய பஸ்களை அரசு கொள்முதல் செய்தது. ஒரு பஸ்சுக்கு தலா42 லட்ச ரூபாய் என மதிப்பீடு செய்து 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
பழுதான பஸ்கள் பத்து லட்சம் கி. மீ. , தொலைவு வரை இயக்கப்பட்டு, ‘பயனற்றவை’ பட்டியலில் இடம் பெற்று நிறுத்தப்பட்டுள்ளன. கோவை மண்டலத்திற்கு, 120 பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கோவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பஸ்கள், அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இதில் 80 பஸ்கள் டவுன் பஸ்களாகவும், 40மப்சல் பஸ்களாகவும் இயக்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட போக்குவரத்து பிரிவு மேற்கொண்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.