சிங்கம்புணரியில் பிபிசி ஆவணப்படத்தை தமிழில் திரையிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! பொதுமக்கள் வரவேற்பு!
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்த மதக்கலவரம் குறித்தும், அதில் அப்போதைய முதலமைச்சரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதியின் பங்கு குறித்தும் பிபிசி செய்தி நிறுவனம் தயாரித்த ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் குறித்து பா.ஜ.க. கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இந்தப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்வது பல்வேறு விதங்களில் தடுக்கப்பட்டும் வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆவணப்படத்தை முற்போக்கு இயக்கங்கள் பொதுமக்களுக்கு திரையிட்டு வருகின்றன.
இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த ஆவணப்படத்தை தமிழ்ப்படுத்தி வெளியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒளிபரப்பியது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் மல்லை சந்திரன் மற்றும் சிங்கம்புணரி நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் தமிழில் ஒளிபரப்பப்பட்ட பிபிசியின் ஆவணப்படத்தை திமுக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் விடுதலைக் கட்சி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், எஸ்.டி.பி.ஐ மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் அமர்ந்தும் நின்றும் பார்த்தனர்.
சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் முத்து மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆவணப்படத்தை பார்த்த அனைவரும் கனத்த இதயத்துடன் கலைந்து சென்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.