கோவை உக்கடம் அல் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான, கண்ணகி, இவர் கடந்த மாதத்தில், லோக்கல் டிவி சேனலில் வங்கி கடன் ஏற்பாடு செய்து தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார், தொடர்ந்து ட்ரீம் பைனான்ஸ் என்ற லோன் கம்பெனியை அவர் தொடர்பு கொண்டு உள்ளார் அவர்கள் கண்ணகியின் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கேட்டறிந்தனர் தொடர்ந்து இன்சூரன்ஸ் போட்டால் மட்டுமே வங்கி கடன் பெற முடியும் என கூறி 8 ஆயிரத்து 600 ரூபாய் வாங்கியுள்ளனர், ஆனால் அதன் பிறகு பல நாட்கள் ஆகியும் கண்ணகிக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை. தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக கண்ணகி உணர்ந்தார். தொடர்ந்து கண்ணகி நேற்று, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.