கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் எல்லா பயணிகள் வால்பாறையை சுற்றி உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர்.
கூலங்கள் ஆறு,பாலாஜி கோயில்,வெள்ளை மழை தனல் ஆகிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு அறிவித்துள்ள அறிவிப்புகளை மதித்து நடப்பதில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாகனங்களை நிணைத்த இடத்தில் நிறுத்தி செல்பி எடுப்பது வன விலங்குகளுக்கு உணவு அளிக்க முயற்சிப்பது குளிக்க தடைவிதித்துள்ள பகுதிகளில் குளிப்பதும் குப்பை கழிவுகளை நினைத்த இடங்களில் போட்டுச் செல்வதும் பாட்டில்களை வீசிச்செல்வதுமாக உள்ளனர்.
மேலும் அருகில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் அவர்களுடைய குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. இதனால் குப்பைக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
கூழாங்கல் ஆற்றுப் பகுதியில் ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு இல்லாமல் குளிக்கின்றனர். எனவே வால்பாறை நகராட்சி அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து குப்பைக் கழிவுகளை
உடனுக்குடன் அகற்றியும் எச்சரிக்கை அறிவிப்புகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.