தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீதிமன்ற வழக்குகளை சிறப்பாக முடிக்க யோசனை தெரிவித்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் உள்ளிட்ட 3 பேருக்கு வெகுமதி வழங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து, அவற்றை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது குறித்து, விசாரணையில் உள்ள வழக்குகளில் காலதாமதம் இல்லாமல் வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது குறித்து, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் விசாரணைக் கூட்டம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் நீதிமன்ற அலுவலகம் குறித்து சிறப்பான முறையில் பதிலளித்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சங்கரலிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி, ஏரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ் (தூத்துக்குடி நகரம்), வசந்த்ராஜ் (திருச்செந்தூர்), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்), வெங்கடேஷ் (கோவில்பட்டி), லோகேஸ்வரன் (மணியாச்சி), அருள் (சாத்தான்குளம்), ஜெயச்சந்திரன் (விளாத்திகுளம்), சம்பத் (அபகரிப்பு தடுப்பு பிரிவு) சிவசுப்பு (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.