
கோவையின் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு வி.செந்தில்பாலாஜி அவர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்க துறையின் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை கண்டித்து.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பாசிச பாஜாகவின் அடாவடி தனத்தை கண்டித்து தலைவர்கள் உரையாற்றினார்கள் கோவை சிவானந்தா காலனியில் 16-06-2023 மாலை 5 மணிக்கு இந்த கண்டன பொதுக்கூட்டம் தொடங்கியது இதில், தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் பங்கேற்று, ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து உரையாற்றினர்.

இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. கண்டண பொதுக்கூட்டம் இடம் மாநாடு போல் மக்கள் வெள்ளத்தால் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-சையத் காதர், குறிச்சி.











