கோவை GT tank பகுதியை சேர்ந்தவர் சின்னையா (26) இவரின் மனைவி தனலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவில் இரவு வீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக ஆம்புலன்ஸ் தனலட்சுமி அவர்களை அழைத்துக்கொண்டு குறிச்சி phc சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது இரயில் மண்டபம் அருகே தனலட்சுமி அவர்களுக்கு வலி அதிகரித்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் குழந்தையின் தலை வெளியே வந்தது இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கற்பகம் சாலை அருகே ஆம்புலன்சை நிறுத்தி பைலட் யுவராஜ் உதவியுடன் பிரசவம் பார்த்தனர் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து குறிச்சி phc மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.