கோவை சுந்தராபுரம் அடுத்த அழகு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தானா பேகம் இவருக்கும் முகமது சித்திக் பாஷா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது, கருத்து வேறுபாடு காரணமாக சுல்தானா பேகமும் அவரது கணவர் முகமது சித்திக் பாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சுல்தானா பேகம் தனது மகனுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நேற்று காலை அவர் தனது ஸ்கூட்டரில் அழகேசன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார் பின்னர் அந்த நபர் சுல்தானா பேகத்தை தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார், இது குறித்து விசாரித்ததில் அந்த நபர் சரண்குமார் என்பதும் அவர் தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் சிவப்பிரகாசம் கூறியதன் பெயரில் அவர் சுல்தானா பேகத்தை பின்தொடர்ந்து வந்து விபரங்களை சேகரித்ததும் தெரியவந்தது.
மேலும் சுல்தானா பேகத்தின் கணவர் முகமது சித்திக் பாஷா தனது மனைவி குறித்து விசாரித்து தருமாறு துப்பறியும் நிறுவனத்தில் அளித்த தகவலின் அடிப்படையில் துப்பறிவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்து வந்தது தெரிய வந்தது போலீசார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.