தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்குச்சாலை ஊராட்சி, கக்கரம்பட்டி கிராமத்தில், கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத் துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் கால்நடை மருந்துவ முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் , மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் , தலைமையில் தொடங்கி வைத்தார்கள்.
முதலில் அமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, அங்கு அழைக்கப்பட்டிருந்த கால்நடை பராமரிப்புத் துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியது : கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 100 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிடப்பட்டதின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெற ஆணையிடப்பட்டது.
முதலாவதாக கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கம் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு 27.06.2023 அன்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரண்டாவது கட்டமாக ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்குச்சாலை ஊராட்சி கக்கரம்பட்டியில் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மொத்தம் 295 கால்நடைகளுக்கு செயற்கைக்கருவூட்டல், குடற்புழு நீக்கம், தடுப்பூசிகள் போடுதல், சினை மாடுகளுக்கு பரிசோதனை செய்து சிறப்பு சிகிச்சை அளித்தல் மற்றும் 625 ஆடுகளுக்கு குடற்புழு நீக்க பணி, தாது உப்பு கலவை வழங்கப்பட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் மற்றும் சிறந்த கிடேறி கன்றுகள் வளர்த்தோர்களுக்கான பரிசுகளை 8 நபர்களுக்கு வழங்கி பாராட்டினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், முதல்வர் (கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி) முனைவர் எம்.செல்லப்பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ்,
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) விஜயஸ்ரீ, ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார், குறுக்குச்சாலை ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும் வென்றான் ஒன்றிய கவுன்சில் வெள்ளைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.