கோவை மாவட்டம் வால்பாறை பகுதி அடுத்துள்ள முடிஸ் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது இந்த பள்ளி ஆனது கோவை தங்கம் எம்எல்ஏ அவர்களின் முயற்சியால் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்தது கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் அனைவரும் வால்பாறை அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று விட்டனர் இந்த சூழ்நிலையில் இந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது.
தற்பொழுது இந்த பழுதடைந்த கட்டிடத்தில் வனவிலங்குகள் புகுந்து கொள்கின்றன எனவே இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள் இந்த பள்ளி கட்டடத்தை தொழில் பயிற்சி நிறுவனம் ஆகவோ தொழில்நுட்ப கல்லூரி ஆகவோ மாற்றினால் இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் தொழில்துறையில் நல்ல முறையில் வளர்ச்சி அடைய,
ஏதுவாக இருக்கும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவே பழுதடைந்து வனவிலங்குகளின் புகழிடமாக உள்ள இந்த கட்டிடத்தை இப்பகுதி மாணவ மாணவியருக்கு பயனுள்ள வகையில் புதுப்பித்து தர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
மற்றும்
-திவ்யக்குமார் வால்பாறை பகுதி நிருபர்.