கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் உள்ளிட்ட பகுதியில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை மேற்கொண்டதில் சுமார் 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதனை அடுத்து தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த வேட்டைக்காரன் புதூர் பழைய செண்பகா தியேட்டர் அருகில் செயல்பட்டு வந்த ஒரு கடைக்கும் மேலும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கும் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை மேலும் தொடர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.