Trending

ஒற்றைக் காட்டு யானை கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் அவதி! – நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சின்கோனா மற்றும் பெரிய கல்லார் ஆகிய அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று நாட்களாக காட்டு யானை ஒன்று இரவு பகல் பார்க்காமல் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களிலும் குடியிருப்புகளிலும் இருக்க முடியாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் படிக்க கூட போக முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வளவு நவீன காலத்திலும் இத்தனை வனத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் இருந்தும் வனவிலங்குகளால் எங்களுக்கு எந்த நேரம் என்ன நடக்குமோ என்று அச்சத்தில் இருக்கிறோம் என்று இப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கல்லூரி மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்த காட்டு யானையை பிடிப்பதற்கு கும்கி யானையை கொண்டு வந்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டு எங்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் மேலும் நாங்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் வேலை செய்யும் பகுதிகளிலும் வனவிலங்கு உள்ளே வராமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் இதைச் செய்யாமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகிறார்கள் எங்களைப் பற்றி சிந்திப்பதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள்.

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி வரும் காலங்களில் எங்களையும் பாதுகாக்க வேண்டும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது உணர வேண்டும் என்றால் தமிழக அரசு நேரடியாக இப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

வால்பாறை
-P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp