கோவை புறநகர் தெற்கு மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது..!!

கோவை புறநகர் தெற்கு மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது நேற்று 16-12-23 மாலை 5 மணி அளவில் பொள்ளாச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் திரு கோவிந்தராஜன் அவர்களின் தலைமையில்
மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது.

நகரமன்ற உறுப்பினரும் நகர செயலாளருமான துரைபாய் வரவேற்றுப் பேசினார்
கழகத்தின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் அவர்களும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் அவர்களும் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் தீர்மானங்களை மாநில செயற்குழு உறுப்பினர் நல்லாம்பள்ளி நாச்சிமுத்து அவர்கள் வாசித்தார்கள் மாவட்ட துணைச் செயலாளர் அன்பழகன் நன்றியுரை நிகழ்த்தினார்,

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் அக்ரோ கிருஷ்ணசாமி தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் சரவணன்மதுக்கரை ஒன்றிய செயலாளர் கண்ணன் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் பொள்ளாச்சி வடக்கில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசக்காபாளையம் ஆனந்த் பொள்ளாச்சி வடக்கில் மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் பொள்ளாச்சி தெற்கில் கிழக்குஒன்றிய செயலாளர் பஞ்சலிங்கம் ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சற்குணம் வால்பாறை நகரச் செயலாளர் கல்யாணி பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு பொதுக்குழு உறுப்பினர் கிரி ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

தீர்மானம் 1 நாடாளுமன்றத்தில் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான
திரு வைகோ அவர்கள்
தென்னை விவசாயிகளுக்காகவும்
கொப்பரை தேங்காய்க்காகவும் மாநிலங்களவையில் குரலற்ற விவசாயிகளின் குரலாக ஒளித்தமைக்கு நன்றிகள் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் 2

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக ரூபாய் 50 லட்சம் நிதி வசூல் செய்து தருவது என முடிவு செய்யப்பட்டது

தீர்மானம் 3

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில்
யார் போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றி பெறுவதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முழுமையாக பாடுபடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் 4

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் மறுமலர்ச்சி திமுக போட்டியிட வேண்டும் எனவும் தெற்கு மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp