₹.20 லட்சம் லஞ்சப் பணத்தோடு சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி! தட்டித் தூக்கிய தமிழ்நாடு காவல்துறை!

‘தமிழ்நாட்டில் திமுகவினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் குறிவைத்து சோதனை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரையே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திண்டுக்கல் மருத்துவர் ஒருவரை மிரட்டி 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சென்றபோது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அந்த அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.

பிடிபட்ட நபர் அங்கிட் திவாரி என்றும் அவர் அமலாக்கத்துறையில் பணி செய்வது போன்று அடையாள அட்டை வைத்திருந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட அங்கிட் திவாரியை திண்டுக்கலில் உள்ள ஒரு தனி இடத்தில் வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அங்கிட் திவாரி என்ற அந்த அதிகாரி, அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பில் உள்ள பணக்காரர்களை குறி வைத்து செயல்பட்டதும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளோரை தொடர்பு கொண்டு வழக்கை முடித்து தருவதாக பேரம் பேசியும் லட்சக்கணக்கில் பலரிடம் பண பறித்ததும் தெரியவந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திண்டுக்கலை சேர்ந்த ஒரு மருத்துவரின் பணக்கார நண்பர்கள் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய முடிவு எடுத்திருக்கிறது என்றும், அப்படி செய்யாமல் இருக்க 50 லட்ச ரூபாய் முதல் கட்டமாக லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறிய அங்கிட் திவாரி மிரட்டியிருக்கிறார். அவரது மிரட்டலுக்கு பயந்ததுபோல முதற்கட்டமாக 20 லட்சம் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட அந்த மருத்துவர், லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திண்டுக்கலில் உள்ள ஒரு இடத்தில் வைத்து அங்கிட் திவாரி அந்த மருத்துவரிடம் பணம் பெற்றுத் திரும்பும்போது, மதுரை – திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், அவரை கையும்களவுமாக பிடித்துள்ளனர். அவரை மீண்டும் திண்டுக்கல் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்டவர் மத்திய அரசின் அமலாக்கத்துறையில் பணிபுரியும் அதிகாரி என்று கூறியுள்ளதால், அவர் உண்மையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிதானா?, இல்லை போலியானவரா என்ற கோணத்திலும் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர், இதற்கு முன்னர் நாக்பூரில் பணியாற்றியதாகவும், சில மாதங்களுக்கு முன்னரே தமிழக அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் முழு விவரம் கிடைத்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை திமுகவினருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி குடைச்சல் கொடுத்துவரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரையே தமிழ்நாடு காவல்துறையினர் 20 லட்சம் ரூபாய் இலஞ்ச பணத்துடன் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே நிகழ்வைப் போலவே சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp